இஸ்ரேலின் வடக்கு பகுதியான பெயிட் ஹில்லாலை குறி வைத்து சுமார் 50 ஏவுகணைகள் வீசப்பட்டது.
ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர் ஹிஸ்புல்லா படையினர். இஸ்ரேலின் வடக்கு பகுதியான பெயிட் ஹில்லாலை குறி வைத்து சுமார் 50 ஏவுகணைகள் வீசப்பட்டது. இவை அனைத்தும் 25 நிமிடங்கள் வரை இடைவிடாமல் ஏவப்பட்டது. அந்த ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து இஸ்ரேல் படை அழித்தது. வான்வெளி தாக்குதலை தடுக்கும் டோம் அமைப்பை பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை தடுத்தது. இதனால் பெரிய அளவில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக லெபனானில் உள்ள கேபர் கிலா மற்றும் டயர் சிறியனே போன்ற இடங்களை குறி வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
c