லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்தது - 9 பேர் பலி, 2,750 பேர் காயம்

September 18, 2024

லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 2,750 பேர் படுகாயமடைந்ததுமாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்பட்டு வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு வழங்கி, இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று மதியம் 3.30 மணிக்கு லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் […]

லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 2,750 பேர் படுகாயமடைந்ததுமாக தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்பட்டு வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு வழங்கி, இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று மதியம் 3.30 மணிக்கு லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 2,750 பேர் படுகாயமடைந்ததுமாக தகவல் கிடைத்துள்ளது. காசா போருக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களால் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் செல்போனை தவிர்க்கும் நிலையில், பேஜர் கருவிகள் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லித்தியம் பேட்டரிகள் அதிகமாக சூடேறி வெடிப்பு ஏற்பட்டதாகவும், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதல் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu