இமாச்சலபிரதேசத்தில் கட்சி தாவல் தடை காரணமாக எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதிய நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இமாச்சலபிரதேச சட்டமன்றத்தில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது என்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.36,000 ஓய்வூதியம் வழங்கப்படும். கடந்தாண்டில், 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், கட்சி தாவலை தடுக்கும் விதமாக இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.