நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு

October 14, 2022

ஹிமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3 மணி அளவில், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வரும் 17 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் […]

ஹிமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3 மணி அளவில், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, வரும் 17 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், 25 ஆம் தேதி மனு தாக்கல் முடிவு என்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள், 29 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu