2100 ஆம் ஆண்டுக்குள் 80% இமாலய பனிப்பாறைகள் உருகும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்த நூற்றாண்டுக்குள் உலகின் மிகப்பெரிய சிகரங்களை கொண்ட இமயமலையில் கிட்டத்தட்ட 80% உருகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக இத்தகைய பேராபத்து நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஹிந்துகுஷ் மலைத் தொடரில் உள்ள பனிப்பாறைகள் 65% வேகமாக உருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் மூலம், 12 ஆறுகள் உற்பத்தி ஆகின்றன. இவை, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், […]

இந்த நூற்றாண்டுக்குள் உலகின் மிகப்பெரிய சிகரங்களை கொண்ட இமயமலையில் கிட்டத்தட்ட 80% உருகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக இத்தகைய பேராபத்து நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஹிந்துகுஷ் மலைத் தொடரில் உள்ள பனிப்பாறைகள் 65% வேகமாக உருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் மூலம், 12 ஆறுகள் உற்பத்தி ஆகின்றன. இவை, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபால், பூடான், திபெத் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு நன்னீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன. எனவே, புவி வெப்பமயமாதல் இதே நிலையில் தொடர்ந்தால், மிகப்பெரிய நன்னீர் ஆதாரங்களை உலகம் இழக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu