சீனா, ஜியாங்சு, சான்டாங், குவாங்டாங், ஜெஜியாங் மற்றும் குவாங்சி ஆகிய ஐந்து இடங்களில் 11 புதிய அணு உலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு சாதனை எண்ணிக்கையாகும். கார்பன் உமிழ்வை குறைக்க அணுசக்தியை அதிகம் நம்பியிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உலைகளுக்கான மொத்த முதலீடு 220 பில்லியன் யுவான் (சுமார் 31 பில்லியன் அமெரிக்க டாலர்) -க்கும் அதிகமாகும். இவற்றை கட்டமைக்க சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
தற்போதைய நிலவரப்படி, சீனாவில் மற்ற எந்த நாட்டையும் விட அதிக அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் தலா 10 புதிய உலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், CGN பவர் கார்ப்பரேஷன் ஆறு உலைகளுக்கும், சீன தேசிய அணுசக்தி கார்ப்பரேஷன் மூன்று உலைகளுக்கும், மாநில மின்சார முதலீட்டு கார்ப்பரேஷன் இரண்டு உலைகளுக்கும் ஒப்புதல் பெற்றுள்ளது.