இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 105% உயர்வு

September 12, 2022

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் ஆரம்ப காலகட்டத்தில், நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 500 ரூபாயாக இருந்தது. தற்போது, அது 400% உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்த வருடத்தில் 105% உயர்வை அடைந்துள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில், 1233 ரூபாயாக இருந்த நிறுவனத்தின் பங்கு விலை, இன்றைய தேதியில், 2534 ரூபாயாக உள்ளது. அதே வேளையில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீட்டு எண்களில் 2% உயர்வு மட்டுமே காணப்படுகிறது. […]

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் ஆரம்ப காலகட்டத்தில், நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 500 ரூபாயாக இருந்தது. தற்போது, அது 400% உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்த வருடத்தில் 105% உயர்வை அடைந்துள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில், 1233 ரூபாயாக இருந்த நிறுவனத்தின் பங்கு விலை, இன்றைய தேதியில், 2534 ரூபாயாக உள்ளது. அதே வேளையில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீட்டு எண்களில் 2% உயர்வு மட்டுமே காணப்படுகிறது. இதனால், நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிறுவனத்தின் வருவாயை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில் 6% வருவாய் உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 22755 கோடி ரூபாயில் இருந்து, 24000 கோடி ரூபாயாக வருவாய் உயர்ந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த உற்பத்திகளில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டில், இந்திய ராணுவத்திற்கு 5 இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் IAF க்கு 10 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஜூலை மாதத்தில் பிரான்சைச் சேர்ந்த சாப்ரான் ஹெலிகாப்டர் இன்ஜின்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ஹெலிகாப்டர் என்ஜின்கள் தயாரிக்கப்பட உள்ளன. இது இந்திய பாதுகாப்பு துறையின் 13 டன் ஹெலிகாப்டர் தயாரிப்பிற்கு துணை புரியும். மேலும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம், ஹனிவெல் நிறுவனத்துடன் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், ஹிந்துஸ்தானின் பயிற்சி விமானத்திற்குத் தேவையான 88TPE331 - 12B இன்ஜின்கள் மற்றும் பாகங்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யப்படும். அத்துடன், கடந்த ஏப்ரல் மாதத்தில், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டு, பயணிகள் விமானங்களை பல்வேறு துறைகளில் ஈடுபடுத்தும் விதமாக மாற்றியமைத்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu