ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL), நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.1,437 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.814 கோடி லாபம் ஈட்டியிருந்த நிலையில், இது 77% அதிகரிப்பாகும்.
கடந்த காலாண்டில், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் இயக்க வருவாய் 11% அதிகரித்து ரூ.4,347 கோடியாகவும், EBITDA 13% அதிகரித்து ரூ.994 கோடியாகவும் உள்ளது. EBITDA மார்ஜின் 39 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 22.9% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த மார்ச் காலாண்டின் ரூ.4,308 கோடி லாபத்துடன் ஒப்பிடும்போது, நிகர லாபம் 67% குறைந்துள்ளது. வருவாய் 71% குறைந்துள்ளது. காலாண்டிற்கான மொத்த செலவு 8% அதிகரித்து ரூ.3,506 கோடியாக உள்ளது. HAL இன் வரிக்கு முந்தைய லாபம் (PBT) 45% அதிகரித்து ரூ.1,584 கோடியாக உயர்ந்துள்ளது.