முதல் முறையாக 40000 இலக்கை தாண்டிய ஜப்பானின் நிக்கெய் 225

March 4, 2024

ஜப்பான் நாட்டு பங்குச் சந்தையின் சராசரி பங்கு குறியீட்டு எண் நிக்கெய் 225 என அழைக்கப்படுகிறது. இந்த குறியீட்டு எண் முதல் முறையாக 40000 மதிப்பை தாண்டி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் கிட்டத்தட்ட 1% உயர்ந்த நிக்கெய் குறியீட்டு எண் 40301.3 ஆக வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. நிக்கெய் 225 யில், கடந்த 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மாதத்தில் மீண்டும் உச்சம் பதிவானது. தொடர்ந்து உயர்ந்து வந்த குறியீட்டு எண் வரலாற்று […]

ஜப்பான் நாட்டு பங்குச் சந்தையின் சராசரி பங்கு குறியீட்டு எண் நிக்கெய் 225 என அழைக்கப்படுகிறது. இந்த குறியீட்டு எண் முதல் முறையாக 40000 மதிப்பை தாண்டி பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக நாளில் கிட்டத்தட்ட 1% உயர்ந்த நிக்கெய் குறியீட்டு எண் 40301.3 ஆக வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. நிக்கெய் 225 யில், கடந்த 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மாதத்தில் மீண்டும் உச்சம் பதிவானது. தொடர்ந்து உயர்ந்து வந்த குறியீட்டு எண் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்பை நிர்ணயிக்கும் இந்த குறியீடு சீரான முறையில் இருக்குமா என்பது குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், ஜப்பானின் பொருளாதார பின்னடைவை சீர் செய்யும் வகையில் இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu