பிரபல பின்னணி பாடகி பி. சுசிலாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும் ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் ரஷீர் கலந்து கொண்டார். இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்,இந்தி, பெங்காலி, ஒடியா,சமஸ்கிருதம்,துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 1795 பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.