உலக வரலாற்றில் அதி வெப்பமான பிப்ரவரி மாதம் இது - தொடர்ந்து 8 மாதங்களாக வெப்ப நிலையில் உச்சம்

March 7, 2024

உலக வரலாற்றிலேயே அதிக வெப்பமான பிப்ரவரி மாதமாக 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் வரலாற்றில் அதிக வெப்பமான மாதமாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணியை மீண்டும் ஒரு முறை எழுப்பி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், உலகின் கடல் பகுதியில் நிலவிய வெப்பநிலை வரலாற்றிலேயே உச்சபட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்டார்டிகா பகுதியில் உள்ள உறைபனி வரலாற்று குறைவாக பதிவாகியுள்ளது. […]

உலக வரலாற்றிலேயே அதிக வெப்பமான பிப்ரவரி மாதமாக 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் வரலாற்றில் அதிக வெப்பமான மாதமாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணியை மீண்டும் ஒரு முறை எழுப்பி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில், உலகின் கடல் பகுதியில் நிலவிய வெப்பநிலை வரலாற்றிலேயே உச்சபட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்டார்டிகா பகுதியில் உள்ள உறைபனி வரலாற்று குறைவாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், எல்நினோ விளைவு காரணமாக வெப்பநிலை மேலும் உயரும் என கூறப்படுகிறது. தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.77C வெப்பம் கூடுதலாக பதிவாகியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பமானதாக இருந்தது. அப்போது, 0.12C அளவில் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu