ஜோ பைடன் மீது பதவி நீக்க நடவடிக்கைக்கான விசாரணை தொடங்கியது

September 14, 2023

ஜோ பைடன் மீது பதவி நீக்க நடவடிக்கைக்கான விசாரணை தொடங்கியது. ஆட்சியில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டிருந்தாலும் அவர்களை ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இது அரசியலமைப்பில் இம்பீச்மென்ட் எனப்படும். இரு நாட்களுக்கு முன், அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்துள்ளார். உதவி ஜனாதிபதியாக 2009-லிருந்து 2017 வரை பதவி வகித்தபோது ஜோ பைடனின் […]

ஜோ பைடன் மீது பதவி நீக்க நடவடிக்கைக்கான விசாரணை தொடங்கியது.
ஆட்சியில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டிருந்தாலும் அவர்களை ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இது அரசியலமைப்பில் இம்பீச்மென்ட் எனப்படும்.
இரு நாட்களுக்கு முன், அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்துள்ளார். உதவி ஜனாதிபதியாக 2009-லிருந்து 2017 வரை பதவி வகித்தபோது ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் உக்ரைன் நாட்டின் பரிஸ்மா எனும் நிறுவனத்திலிருந்து சட்டவிரோதமாக லாபம் அடைந்தார் என பைடன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் ரூ.165 கோடிகள் ஆதாயம் அடைந்தனர் என தெரிகிறது. இருப்பினும், பயனாளிகளில் பைடனின் பெயர் இருப்பதை உறுதி செய்ய தற்போது வரை முடியவில்லை. இதற்கான விசாரணை கமிட்டியின் தலைவர் ஜேம்ஸ் கோமர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஈடுபட்டு வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu