ஹியூமன் ஏஐ நிறுவனத்தை 1 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ஹெச்பி நிறுவனம்

June 10, 2024

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெச்பி நிறுவனம், ஹியூமன் ஏஐ (Humane AI) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை வாங்குகிறது. கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்கள் தொகைக்கு இந்த கையகப்படுத்தல் நிகழ்வதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு, ஹியூமன் ஏஐ என்ற நிறுவனம் ஏஐ பின் என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த சாதனம், டைம்ஸ் இதழின் சிறந்த 200 கண்டுபிடிப்புகள் பட்டியலில் இடம்பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் முதல், ஏஐ பின் சாதனத்தை ஹியூமன் […]

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெச்பி நிறுவனம், ஹியூமன் ஏஐ (Humane AI) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை வாங்குகிறது. கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்கள் தொகைக்கு இந்த கையகப்படுத்தல் நிகழ்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு, ஹியூமன் ஏஐ என்ற நிறுவனம் ஏஐ பின் என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த சாதனம், டைம்ஸ் இதழின் சிறந்த 200 கண்டுபிடிப்புகள் பட்டியலில் இடம்பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் முதல், ஏஐ பின் சாதனத்தை ஹியூமன் ஏஐ நிறுவனம் 699 டாலர்களுக்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. ஆனால், இந்த சாதனம் குறித்து பயனர்களிடம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சாதனம் சீக்கிரமாக சூடாகிறது; அதன் செயல்பாடுகளில் சிறிய குறைபாடுகள் உள்ளன; என கூறப்படுகிறது. ஆனால், ஹியூமன் ஏஐ பயனர்களுக்கு முறையான பதில் வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, ஏஐ பின் சாதனத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஹியூமன் ஏஐ நிறுவனத்தை 750 மில்லியன் முதல் 1 பில்லியன் டாலர்கள் வரை வாங்குவதற்கு எச்பி நிறுவனம் பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu