கடந்த மே 24ம் தேதி முதல் ஹப்பிள் தொலைநோக்கி செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, தொலைநோக்கில் இருந்த ஒரு கைரோஸ்கோப் செயலிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 4ம் தேதி, அதை மீட்டெடுக்க முடியவில்லை என்று நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இனிமேல் எஞ்சியுள்ள 3 கைரோஸ்கோப்புகளில் ஒன்றை மட்டும் பயன்படுத்தி ஹப்பிள் தொலைநோக்கி இயங்கும் என தெரிவித்துள்ளது. இதனால், ஹப்பிள் தொலைநோக்கியின் அப்சர்வேஷனில் 12% சரிவு காணப்படும்.
நாசாவின் வான் இயற்பியல் பிரிவு நிர்வாகி மார்க் க்ளாம்பின், ஹப்பிள் தொலைநோக்கி பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஹப்பிள் தொலைநோக்கியில் 3 கைரோஸ்கோப்புகள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் பயன்படுத்தி தொலைநோக்கியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஹப்பிள் தொலைநோக்கி, 2030 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என கருதப்படுகிறது.