மெக்சிகோ, கலிபோர்னியாவில் ஹிலாரி சூறாவளி - வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது

August 19, 2023

மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா பகுதியை ஹிலாரி சூறாவளி நேற்று தாக்கியது. மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா பகுதியை ஹிலாரி சூறாவளி தாக்கியது. இதனை தொடர்ந்து கலிபோர்னியாவில் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் குறித்து அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரித்துள்ளது. மெக்சிகோவின் கபோ சான் லூகாஸ் நகருக்கு அருகில் சக்திவாய்ந்த புயல் வீசும் என்று எதிர்பார்க்கிறது. இருப்பினும் அமெரிக்க மேற்கு கடற்கரையைத் தாக்கும் முன் அது வலுவிழந்தாலும் கடும் மழை ஏற்படும் என கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் பாஜா […]

மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா பகுதியை ஹிலாரி சூறாவளி நேற்று தாக்கியது.

மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா பகுதியை ஹிலாரி சூறாவளி தாக்கியது. இதனை தொடர்ந்து கலிபோர்னியாவில் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் குறித்து அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரித்துள்ளது. மெக்சிகோவின் கபோ சான் லூகாஸ் நகருக்கு அருகில் சக்திவாய்ந்த புயல் வீசும் என்று எதிர்பார்க்கிறது. இருப்பினும் அமெரிக்க மேற்கு கடற்கரையைத் தாக்கும் முன் அது வலுவிழந்தாலும் கடும் மழை ஏற்படும் என கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் பாஜா கலிபோர்னியா மற்றும் தெற்கு கலிபோர்னியாவின் பெரும்பகுதிகளில் பேரழிவு ஏற்படத்தக்கூடிய வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான டிஜுவானாவில் உள்ள அதிகாரிகள், ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்புகின்றனர். ஹிலாரி சூறாவளியானது மேற்கு-வடமேற்கில் மணிக்கு கிட்டத்தட்ட 19 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் 215 கி.மீ. வேகத்தில் வீசி வகை 4 சூறாவளியாக மாறும். இம்முறை வரலாறு காணாத கோடை வெப்ப அலையைத் தொடர்ந்து கலிபோர்னியா, நெவாடா மற்றும் அண்டை நாடான அரிசோனாவில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu