உலகின் 3 வது பணக்கார நகரமானது மும்பை

August 30, 2024

அண்மையில் வெளியிடப்பட்ட ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின் அடிப்படையில், மும்பை நகரம் பெய்ஜிங்கை முந்தி, ஆசியாவின் பில்லியனர் தலைநகராக உருவெடுத்துள்ளது. கடந்த ஓராண்டில், மும்பை நகரில் 58 புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். அதன்படி, மும்பை நகரத்தின் மொத்த பில்லியனர் எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மும்பை நகரில் வசிக்கும் பில்லியனர்கள் எண்ணிக்கை 92. அதுவே, சீனாவின் பெய்ஜிங் நகரில் 91 பில்லியனர்கள் உள்ளனர். மும்பை பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 445 பில்லியன் டாலர்களாக உள்ளது. […]

அண்மையில் வெளியிடப்பட்ட ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின் அடிப்படையில், மும்பை நகரம் பெய்ஜிங்கை முந்தி, ஆசியாவின் பில்லியனர் தலைநகராக உருவெடுத்துள்ளது. கடந்த ஓராண்டில், மும்பை நகரில் 58 புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். அதன்படி, மும்பை நகரத்தின் மொத்த பில்லியனர் எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மும்பை நகரில் வசிக்கும் பில்லியனர்கள் எண்ணிக்கை 92. அதுவே, சீனாவின் பெய்ஜிங் நகரில் 91 பில்லியனர்கள் உள்ளனர். மும்பை பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 445 பில்லியன் டாலர்களாக உள்ளது.

ஹுருன் பட்டியலின்படி, மும்பை உலகின் 3 வது பணக்கார நகரமாக உள்ளது. 119 பில்லியனர்களுடன் நியூயார்க் முதலிடத்திலும், 97 பில்லியனர்களுடன் லண்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்திய அளவில், அதிக பில்லியனர்களைக் கொண்ட நகரமாக மும்பை விளங்குகிறது. அடுத்ததாக, 217 பில்லியனர்களுடன் டெல்லி 2 ம் இடத்தில் உள்ளது. பெங்களூருவை முந்தி 104 பில்லியனர்களுடன் ஹைதராபாத் 3ம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் முதல் 10 பணக்கார நகரங்களில், சென்னை, அகமதாபாத், கொல்கத்தா, புனே, சூரத் மற்றும் குருகிராம் ஆகியவை உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu