ரஷ்யாவில் இருந்து வெளியேறும் ஹூண்டாய் மோட்டார்ஸ்

April 27, 2023

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், ரஷ்யாவில் உள்ள தனது ஆலைகளின் செயல்பாடுகளை ஹுண்டாய் நிறுவனம் நிறுத்தியது. தற்போது, அனைத்து ஆலைகளையும் விற்பதற்கான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலைகள், ரஷ்யாவின் கசாக் நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளன. ரஷ்ய அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், ஆலைகள் கைமாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய போது, பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவில் […]

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், ரஷ்யாவில் உள்ள தனது ஆலைகளின் செயல்பாடுகளை ஹுண்டாய் நிறுவனம் நிறுத்தியது. தற்போது, அனைத்து ஆலைகளையும் விற்பதற்கான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலைகள், ரஷ்யாவின் கசாக் நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளன. ரஷ்ய அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், ஆலைகள் கைமாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய போது, பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறின. ஹூண்டாய் நிறுவனம், தனது ஆலை செயல்பாடுகளை மட்டுமே ரஷ்யாவில் நிறுத்தியது. போர் நிறைவடைந்த உடன், செயல்பாடுகளை தொடங்க வசதியாக இருக்கும் என்று கருதி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது, ஆலைகள் ரஷ்ய நிறுவனத்திற்கு மாற்றப்படுவது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu