கிராமப்புற மக்களை எளிதில் சென்றடைவதற்காக, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், பிரபல உணவு வர்த்தக நிறுவனமான ஐடிசி உடன் இணைந்துள்ளது. ஐடிசி யின் வேளாண் பொருட்கள் வர்த்தகத்தை மேம்படுத்தும் பாதையில், கிராமப்புற மக்களை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாக, கிராமப்புறங்களில் எஸ்யூவி ரக வாகனங்கள் அதிகம் விற்பனை ஆகும். மேலும், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, 47% விற்பனை எஸ்யூவி ரக வாகனங்கள் மூலம் கிடைக்கின்றது. எனவே, ஐடிசி ஈ சோபால் மற்றும் ஐடிசி மார்ஸ் வணிகங்கள் மூலம், ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்யூவி விற்பனையை விவசாயிகளிடம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கிராமப்புறங்களில் பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகளை இரு நிறுவனங்களும் ஏற்பாடு செய்து வருகின்றன.