அரசு பங்களாவை காலி செய்கிறேன்-  ராகுல் காந்தி 

March 28, 2023

அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலாளருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மோடி பற்றிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அரசு பங்களாவை அடுத்த மாதம் 22-ந்தேதிக்குள் காலி செய்யுமாறு மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீசு அனுப்பியது. இது தொடர்பாக அவர் மக்களவை செயலாளருக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில், மக்களவை உறுப்பினர் என்ற […]

அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலாளருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மோடி பற்றிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அரசு பங்களாவை அடுத்த மாதம் 22-ந்தேதிக்குள் காலி செய்யுமாறு மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீசு அனுப்பியது. இது தொடர்பாக அவர் மக்களவை செயலாளருக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில், மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு வழங்கிய பங்களாவை நான் காலி செய்கிறேன். 4 முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொது மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நான் நடக்கிறேன் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu