யுபிஎஸ்சி புதிய தலைவராக ஐஎஎஸ் அதிகாரி ப்ரீதி சுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி- யின் தலைவராக இருந்த மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஐஎஎஸ் அதிகாரி ப்ரீதி சுடன், யூனியன் பப்ளிக் சேவா கமிஷன் (UPSC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இப்பதவியில் நீடிக்க உள்ளார். மேலும் ப்ரீதி சுடன், ஆகஸ்ட் 21 அன்று தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.