7800 வேலைகள் செயற்கை நுண்ணறிவால் நிரப்பப்படும் - ஐபிஎம் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நிறுத்திவைப்பு

ஐபிஎம் நிறுவனம், கிட்டத்தட்ட 7000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பணியிடங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நிரப்ப உள்ளதாக கூறியுள்ளது. ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக, மனித வளத்துறை உள்ளிட்ட சில அலுவல் பணிகள் குறைக்கப்படும் மற்றும் நிறுத்தப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், நேரடியாக வாடிக்கையாளருடன் தொடர்பில் அல்லாத 30% பணியிடங்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் பூர்த்தி […]

ஐபிஎம் நிறுவனம், கிட்டத்தட்ட 7000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பணியிடங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நிரப்ப உள்ளதாக கூறியுள்ளது. ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக, மனித வளத்துறை உள்ளிட்ட சில அலுவல் பணிகள் குறைக்கப்படும் மற்றும் நிறுத்தப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், நேரடியாக வாடிக்கையாளருடன் தொடர்பில் அல்லாத 30% பணியிடங்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் பூர்த்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பரவலாக பயன்பாட்டுக்கு வரும் நேரத்தில், இவரது அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu