நேதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெதர்லாந்தில் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. இதில் நேதன்யாகுவை போர் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது. தென் ஆப்பிரிக்கா தொடர்ந்துள்ள இந்த வழக்கின் மூன்றாவது கட்ட விசாரணை கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. தற்போது நேதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, காசா போர் ஏழு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கலண்ட், ஹமாஸ் தலைவர்கள் ஏகியா சின்வர், முகமது டேயப், இஸ்மாயில் ஹனியே ஆகியோர் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். நேதன்யாகு காசாவில் இனப்படுகொலை செய்கிறார். எனவே இவர்களுக்கு எதிராக கைது உத்தரவை பிறப்பிக்க கூறியுள்ளேன். இங்கு பொதுமக்கள் பட்டினியால் வாடுகின்றனர். பொது மக்களை பட்டினி போடுவது போர் உத்தியாக இங்கு கையாளப்படுகிறது. இந்த செயல்களுக்கு இவர்கள் அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.