ஐசிஐசிஐ வங்கி தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் 36108.88 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9852.7 கோடி ரூபாயாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27% உயர்வாகும். அதே வேளையில், வங்கியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் கிடைத்த நிகர லாபம் 30% உயர்ந்து, 9121.87 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த வருவாய் 40% உயர்ந்து, 17667 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.