7 லட்சம் பங்குகளை பரிசளித்த ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் தலைமை செயல் அதிகாரி

March 22, 2024

ஐ டி எஃப் சி ஃபர்ஸ்ட் பேங்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன், தனக்கு சொந்தமில்லாத 5 பேருக்கு 7லட்சம் பொது பங்குகளை பரிசளித்துள்ளார். கடந்த மார்ச் 21ஆம் தேதி பங்குகள் பரிசளிக்கப்பட்டதாக பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு ஐடிஎப்சி நிறுவனத்தின் பங்குகள் கவனம் பெற தொடங்கியுள்ளன. ஐடிஎப்சி தலைவர் வைத்தியநாதன் பரிசளித்த பொது பங்குகளின் மொத்த மதிப்பு 5.44 கோடி ஆகும். இதில் வீடு வாங்கியதற்கு உதவி செய்த […]

ஐ டி எஃப் சி ஃபர்ஸ்ட் பேங்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன், தனக்கு சொந்தமில்லாத 5 பேருக்கு 7லட்சம் பொது பங்குகளை பரிசளித்துள்ளார். கடந்த மார்ச் 21ஆம் தேதி பங்குகள் பரிசளிக்கப்பட்டதாக பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு ஐடிஎப்சி நிறுவனத்தின் பங்குகள் கவனம் பெற தொடங்கியுள்ளன.

ஐடிஎப்சி தலைவர் வைத்தியநாதன் பரிசளித்த பொது பங்குகளின் மொத்த மதிப்பு 5.44 கோடி ஆகும். இதில் வீடு வாங்கியதற்கு உதவி செய்த சமீர் மாத்ரிக்கு 50,000 பங்குகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், தனது உறவினருக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்ததற்காக மயங்க் மிருணாள் கோஷ் என்பவருக்கு 75000 பொது பங்குகள் பரிசளிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, வைத்தியநாதனின் ஆரம்பகால வாழ்க்கைக்கு உதவியாக இருந்த சம்பத்குமார் என்பவருக்கு 2.5 லட்சம் பங்குகள் பரிசளிக்க பட்டுள்ளது. மேலும், அவரது நண்பர் மனோஜ் சகாய் என்பவருக்கு 50000 பங்குகளும். வீடு வாங்கியது தொடர்பாக கணோஜியாவுக்கு 275,000 பங்குகளும் பரிசளிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu