இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி - இலங்கை அரசு

August 30, 2023

விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி நெருக்கடி காரணமாக கால்நடை தீவன இறக்குமதி குறைந்தது.இதன் காரணமாக அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவானது. அப்போது இலங்கை அரசு இந்தியாவில் இருந்து 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்தது. இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9 கோடியே 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி […]

விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அன்னிய செலவாணி நெருக்கடி காரணமாக கால்நடை தீவன இறக்குமதி குறைந்தது.இதன் காரணமாக அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவானது. அப்போது இலங்கை அரசு இந்தியாவில் இருந்து 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்தது.

இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9 கோடியே 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளது இலங்கை அரசு. கொழும்பில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகத்துறை மந்திரி பந்துல குணவர்தனே தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu