மதுரை மத்திய சிறையில் பார்வையாளர்கள் உடன் சிறைவாசிகள் இன்டர்காமில் பேசும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளை நவீனமயமாக்கும் பல்வேறு திட்டங்களை சிறைத்துறை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகள் நேர்காணல் அறையை நவீனபடுத்தும் திட்டம் புழல் மற்றும் கோவை மத்திய சிறையில் ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மத்திய சிறையிலும் சிறைவாசிகளை சந்திக்க வருபவர்கள் இன்டர்காமில் உரையாடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி இந்த வசதியை தொடங்கி வைத்தார். பின்னர் பார்வையாளர்கள் சிறைவாசிகளுடன் உரையாடினர்.