இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் திறப்பு

November 29, 2022

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் நிறுவனம் இந்த ஏவுதளத்தை கட்டமைத்துள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத், நவம்பர் 25 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த ராக்கெட் ஏவுதளத்தில், இரண்டு பிரிவுகள் உள்ளன. முதலாவது, அக்னிகுல் ராக்கெட் ஏவுதளம். இரண்டாவது அக்னிகுல் மிஷன் கட்டுப்பாட்டு மையம். இந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் முக்கிய அமைப்பு 4 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. திரவ நிலை எரிபொருளை […]

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் நிறுவனம் இந்த ஏவுதளத்தை கட்டமைத்துள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத், நவம்பர் 25 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்த ராக்கெட் ஏவுதளத்தில், இரண்டு பிரிவுகள் உள்ளன. முதலாவது, அக்னிகுல் ராக்கெட் ஏவுதளம். இரண்டாவது அக்னிகுல் மிஷன் கட்டுப்பாட்டு மையம். இந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் முக்கிய அமைப்பு 4 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. திரவ நிலை எரிபொருளை கருத்தில் கொண்டு இந்த ஏவுதளம் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருப்பதுடன், தரவுகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதளம், இஸ்ரோ மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரம் மையம் (இன் ஸ்பேஸ்) ஆகியவற்றின் உதவியுடன் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu