பாராளுமன்ற கூட்டத்தில் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு

புதிய எம்பிக்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபாநாயகர்களை தேர்வு செய்யவும்இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒன்பதாம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருடன் 72 மத்திய மந்திரிகளும் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் புதிய எம்.பிக்கள் […]

புதிய எம்பிக்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபாநாயகர்களை தேர்வு செய்யவும்இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒன்பதாம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருடன் 72 மத்திய மந்திரிகளும் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் புதிய எம்.பிக்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர் துணை சபாநாயகர் தேர்வு செய்வதற்காகவும் பாராளுமன்றம் கூட்டம் கூடியது. மேலும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களும் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். அதன்படி காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து புதிய எம்பிக்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. இதை சபாநாயகர் இருக்கையில் இருந்து மஹதாப் இந்த கூட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் ஆளும் கட்சி தலைவர் முறையில் பிரதமர் மோடிக்கு எம்.பியாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று முதல் நபராக மோடி எம்பி பதவியேற்றார். இதனை தொடர்ந்து தற்காலிக சபாநாயகருக்கு உதவியாக 5 எம்பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புதிய எம்பிக்கள் பதவியேற்பு நடைபெற்றது. மேலும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு நடைபெற உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu