மும்பையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘இன்கோவாக்’ நாசி தடுப்பூசி

April 29, 2023

மும்பையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூக்கு மூலம் செலுத்தப்படும் நாசி தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் 10 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட […]

மும்பையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூக்கு மூலம் செலுத்தப்படும் நாசி தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் 10 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு போடப்படுகிறது.

மும்பை மாநகராட்சியின் சார்பில், ‘ஐ.என்.சி.ஓ.வி.ஏ.சி’ (இன்கோவாக்) என்ற தடுப்பூசி இன்று முதல் சுகாதார மையங்களில் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu