அந்நியச் செலாவணி கையிருப்பு 62,320 கோடி டாலராக உயர்வு

January 8, 2024

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 62,320 கோடி டாலராக உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது, கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 62,320 கோடி டாலர் ஆகும். டிசம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 447.1 கோடி டாலர் உயர்ந்து 61,597.1 கோடி டாலராக இருந்தது. அக்டோபர் 2021ல் நாட்டின் அன்னியச் செலவு பண்ணி கையிருப்பு 64,500 கோடி டாலராக இருந்தது. […]

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 62,320 கோடி டாலராக உள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது, கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 62,320 கோடி டாலர் ஆகும். டிசம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 447.1 கோடி டாலர் உயர்ந்து 61,597.1 கோடி டாலராக இருந்தது. அக்டோபர் 2021ல் நாட்டின் அன்னியச் செலவு பண்ணி கையிருப்பு 64,500 கோடி டாலராக இருந்தது. ரூபாய் மதிப்பை பாதுகாக்க அந்நிய செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி பயன்படுத்துவதால் குறைந்தது. இந்நிலையில் கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துக்கள் 186.9 கோடி டாலர் உயர்ந்து 5561.5 கோடி டாலராக உள்ளது.

டாலர் அல்லாத பவுண்டு, யூரோ, என் போன்ற பிற செலவாணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அந்நிய நாணய சொத்துக்கள் ஆகும். தங்கம் கையிருப்பு 85 கோடி டாலர் உயர்ந்து 4832.8 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியில் நாட்டின் கையிருப்பு 20 லட்சம் டாலர் குறைந்து 489.2 கோடி டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu