தமிழகத்தில் கூட்டுறவு துறை அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் அனைத்து கடன்களையும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் இதுவரை அதிகபட்சமாக 20 லட்சம் வரை வழங்கப்பட்ட நிலையில் தற்போது 30 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதற்கான கால வரம்பில் மாற்றம் எதுவும் இல்லை. அதேபோல் சம்பள கடன் அதிகபட்சமாக 7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடனை 84 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற கால வரம்பு 120 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சிறு வணிக கடனாக 50,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை 350 நாட்களில் செலுத்த வேண்டும் என்ற காலவரம்பில் எவ்வித மாற்றமும் இல்லை. ரூபாய் 50000 வரையான தனி நபர் கடனுக்கு ஒரு நபர் ஜாமீன் உத்திரவாதமும், ரூபாய் 50,000 முதல் 1,00,000 வரையிலான தனிநபர் கடனுக்கு இரண்டு பேர் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்றும் ஜாமீன் வழங்கும் நபர்களுக்கு அரசு அல்லது தனியார் துறையில் சம்பளம் பெறும் பணியாளராகவும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் எனவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.