தமிழகத்தில் டெங்கு கொசு உற்பத்தி அதிகரிப்பு

September 19, 2023

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் காரணமாக டெங்கு பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் இதுவரை 283 இடங்களில் தமிழகத்தில் உற்பத்தியாகி உள்ளது என சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆய்வு பணிகள் விரிவு படுத்தப்பட்டு நோய் பரப்புவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக இன்ஃப்ளூயன்சா மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. […]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் காரணமாக டெங்கு பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் இதுவரை 283 இடங்களில் தமிழகத்தில் உற்பத்தியாகி உள்ளது என சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆய்வு பணிகள் விரிவு படுத்தப்பட்டு நோய் பரப்புவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக இன்ஃப்ளூயன்சா மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மாநிலம் முழுவதும் சிகிச்சை கட்டமைப்பு பணிகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகம் முழுவதும் 8,733 பகுதிகளில் கொசுக்கள், லார்வா சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் 283 இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பப்படும் கொசுக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu