இந்தியாவில் சிகரெட், மது விற்பனை அதிகரித்துள்ளது.
வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்கள் சந்தையில் கடந்த ஆண்டு சிகரெட் மற்றும் மது விற்பனை அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் தொழில்துறை மதிப்பீடுகளின்படி டிசம்பர் 2022 வரை கடந்த 4 காலாண்டுகளில் சிகரெட் விற்பனை அளவு தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதே போல மது விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.
கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது. இதுகுறித்து மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின் நிர்வாக இயக்குனர் ஹினா நாகராஜன் கூறுகையில், பணவீக்கம் மற்றும் பெரிய அளவிலான மேக்ரோ பொருளாதார பிரச்சினை சற்று இழுபறியாக இருக்கலாம். ஆனால் நுகர்வோர் தேவை தொடர்ந்து வலுவாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.