மேட்டூர் அணைக்கு 79682 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து 79 ஆயிரத்து 682 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசேகர் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நிரம்பியுள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி கே ஆர் எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரத்து 127 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் […]

கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து 79 ஆயிரத்து 682 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசேகர் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நிரம்பியுள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி கே ஆர் எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரத்து 127 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 20386 கன அடியாக வந்து கொண்டுள்ளத. இந்த இரண்டு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 58 ஆயிரத்து 779 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 79 ஆயிரத்து 682 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu