இண்டீட் நிறுவனத்தில் 1000 பேர் பணிநீக்கம்

May 15, 2024

இண்டீட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பதவி நீக்கம் செய்துள்ளது. உலகின் முன்னணி வேலை வாய்ப்பு நிறுவனம் இண்டீட் இணையதளம் நிறுவனம் ஆகும். அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பதவி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் இண்டீட் நிறுவனத்தின் எட்டு சதவீத ஊழியர்களை பணி […]

இண்டீட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பதவி நீக்கம் செய்துள்ளது.

உலகின் முன்னணி வேலை வாய்ப்பு நிறுவனம் இண்டீட் இணையதளம் நிறுவனம் ஆகும். அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பதவி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் இண்டீட் நிறுவனத்தின் எட்டு சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரவல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக பல நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிப்பதை குறைத்து விட்டன. அமெரிக்காவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இதனால் நெருக்கடியான நிலையை சந்தித்து வருவதால் அங்கு தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இண்டீட் நிறுவனமும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் அதனாலேயே ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டியதாகிவிட்டது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு 2200 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu