இந்தியாவின் ஐபிஓ சந்தை கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நடப்பு 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும், உலகளாவிய ஐபிஓக்களில் 25% பங்கை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஐபிஓ சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) ஐபிஓக்களும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. 2019-ம் ஆண்டு 2 சதவீதமாக இருந்த ஐபிஓக்களின் சராசரி ஆதாயம், 2024-ம் ஆண்டு 74 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை காட்டுகிறது. அதே சமயத்தில், இந்தியாவில் ஐபிஓக்களில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் பங்குச் சந்தையில் பொதுமக்களின் ஈடுபாடு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இந்தியாவின் ஐபிஓ சந்தை உலகளாவிய அளவில் முன்னணியில் இருப்பது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.