பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கொல்லும் இந்திய உளவு அமைப்பு - இங்கிலாந்து அறிக்கை

April 6, 2024

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை இந்திய உளவு அமைப்பு கொல்வதாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்று கூறியுள்ளது. பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய உளவாளி அமைப்பால் கொல்லப்படுகின்றனர் என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது. பாகிஸ்தானில் இந்திய உளவாளிகள் பதுங்கி இருந்து அங்கு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை கொன்று வருகின்றனர் என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய உளவு அமைப்பான ரா உளவாளிகள் இந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது இந்திய […]

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை இந்திய உளவு அமைப்பு கொல்வதாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய உளவாளி அமைப்பால் கொல்லப்படுகின்றனர் என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது. பாகிஸ்தானில் இந்திய உளவாளிகள் பதுங்கி இருந்து அங்கு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை கொன்று வருகின்றனர் என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய உளவு அமைப்பான ரா உளவாளிகள் இந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது இந்திய பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்றும் அந்த பத்திரிகை மேலும் கூறியிருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து ரா கிளை செயல்படுவதாகவும், இந்திய ஸ்லீப்பர் செல்கள் மற்றும் உள்ளூர் குற்றவாளிகளைக் கொண்டு 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத கொலைகளை அரங்கேற்றினர் என்று கூறியுள்ளது. இந்த செயல்பாடு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரதமர் அலுவலகம் எடுத்த தேசிய பாதுகாப்புக்கான உறுதியான அணுகுமுறை என்றும் கூறப்படுகிறது.

இந்த செய்தியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அதோடு கண்டனமும் தெரிவித்துள்ளது. இது தவறான பிரச்சாரம் என்றும் தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் என்றும் இந்திய அரசு விமர்சித்துள்ளது. பிற நாடுகளில் குறிவைத்துக் கொல்வது இந்திய அரசின் கொள்கை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu