மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இலங்கையில் ஒன்பதாவது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. […]

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இலங்கையில் ஒன்பதாவது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய வீராங்கனைகள் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu