டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் முன்னாள் ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மனைவி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி ஆகியோரும் பங்கேற்று உள்ளனர். இவை தவிர காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பலரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.