உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, ஐரோப்பா, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தது. இதன் விளைவாக, இந்தியாவிலிருந்து ‘சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்’ ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. எனவே, தற்போதைய நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது. அதே வேளையில், ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகவும் இந்தியா உள்ளது.
இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளின் அளவு, நாள் ஒன்றுக்கு 360000 பேரல்களை எட்ட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது, சவுதி அரேபியாவில் இருந்து ஐரோப்பா பெறும் எண்ணெய் அளவை விட கூடுதலாகும். இதனால், உக்ரைன் ரஷ்யா போர் மூலம் இந்தியாவுக்கு சாதகமான வர்த்தகச் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.