70 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் பிறந்துள்ள 4 சிறுத்தை குட்டிகள்

March 30, 2023

இந்தியாவில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 4 சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன. சிறுத்தை இனம் இந்தியாவில் அழிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக, 4 சிறுத்தை குட்டிகளுக்கு இந்தியா தாயகம் ஆகியுள்ளது. இது குறித்து இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த செய்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “கடந்த செப்டம்பர் மாதத்தில், நமீபியா நாட்டிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. மத்திய பிரதேசத்தில் உள்ள […]

இந்தியாவில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 4 சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன. சிறுத்தை இனம் இந்தியாவில் அழிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக, 4 சிறுத்தை குட்டிகளுக்கு இந்தியா தாயகம் ஆகியுள்ளது. இது குறித்து இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த செய்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“கடந்த செப்டம்பர் மாதத்தில், நமீபியா நாட்டிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. மத்திய பிரதேசத்தில் உள்ள குநோ தேசிய பூங்காவில் அவை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றில் சியாயா - பிரெட்டி இணைக்கு சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன. சில தினங்களுக்கு முன்னர், சிறுநீரகக் கோளாறால் ஷாஷா என்ற சிறுத்தை பலியானது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ள செய்தி வெளிவந்துள்ளதால், கவலை மறைந்துள்ளது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில். 50 சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu