உக்ரைன் ரஷ்யா போர் உலக அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தப் போரில் இந்தியா எடுத்து வரும் நிலைப்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா எந்த ஒரு நாட்டின் பக்கத்தையும் சார்ந்து இல்லை. இந்தியா, உக்ரைன் மற்றும் ரஷ்யா இரண்டு நாடுகளுடனும் நல்ல உறவைப் பேணி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தை நடத்த, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை மத்தியஸ்தர்களாக ஏற்றுக்கொள்வதாக புதின் தெரிவித்துள்ளார். உலக அரசியலில் இந்த நாடுகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக இது அமைகிறது. குறிப்பாக, இந்தியாவின் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.