இந்திய பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் வரலாற்று உச்சம் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு

April 1, 2024

இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதி மதிப்பு வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். “நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதி மதிப்பு 21083 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.5% உயர்வாகும். அத்துடன், வரலாற்றில் முதல் முறையாக, 21,000 கோடி என்ற இலக்கை ஏற்றுமதி மதிப்பு தாண்டி உள்ளது.” - இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு […]

இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதி மதிப்பு வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

“நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதி மதிப்பு 21083 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.5% உயர்வாகும். அத்துடன், வரலாற்றில் முதல் முறையாக, 21,000 கோடி என்ற இலக்கை ஏற்றுமதி மதிப்பு தாண்டி உள்ளது.” - இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில், பாதுகாப்பு துறையில் தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேஜஸ் விமானம், இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான தாங்கிகளுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu