மாலத்தீவுக்கு இந்தியா 5 கோடி டாலர் நிதியுதவி

May 14, 2024

மாலத்தீவுக்கு இந்தியா வழங்கும் வட்டி இல்லா கடனான 5 கோடி டாலர் நிதி உதவியை மேலும் ஓராண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது. இது தொடர்பாக மாலத்தீவு நிதி அமைச்சகம் வெளியிட்ட 5 கோடி டாலர் அரசு கருவூல பத்திரத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி மேலும் ஓர் ஆண்டுக்கு அவகாசம் அளித்துள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. மாலத்தீவு அரசு சிறப்பு கோரிக்கை விடுத்ததால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் […]

மாலத்தீவுக்கு இந்தியா வழங்கும் வட்டி இல்லா கடனான 5 கோடி டாலர் நிதி உதவியை மேலும் ஓராண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது.

இது தொடர்பாக மாலத்தீவு நிதி அமைச்சகம் வெளியிட்ட 5 கோடி டாலர் அரசு கருவூல பத்திரத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி மேலும் ஓர் ஆண்டுக்கு அவகாசம் அளித்துள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. மாலத்தீவு அரசு சிறப்பு கோரிக்கை விடுத்ததால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூஸா ஷமி கடந்த எட்டாம் தேதி இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu