ஈரான் சிறைவைத்த 40 மாலுமிகளை விடுவிக்க இந்தியா கோரிக்கை

May 16, 2024

40 இந்திய மாலுமிகளை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் நாட்டிற்கு இந்தியாவின் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சார்பானந்தா சோனுவால் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி உசேன் அமீர் அப்துல்லாஹ்வினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள 40 இந்திய மாலுமிகளை விடுதலை செய்யுமாறு அமீரிடம் சார்பானந்தா வலியுறுத்தினார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகளை விடுவிக்க ஈரான் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் […]

40 இந்திய மாலுமிகளை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் நாட்டிற்கு இந்தியாவின் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சார்பானந்தா சோனுவால் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி உசேன் அமீர் அப்துல்லாஹ்வினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள 40 இந்திய மாலுமிகளை விடுதலை செய்யுமாறு அமீரிடம் சார்பானந்தா வலியுறுத்தினார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகளை விடுவிக்க ஈரான் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சில சட்ட நடைமுறைகள் பின்பற்ற வேண்டி இருப்பதால் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழே கடந்த எட்டு மாதங்களில் குளோபல், செர்லின், மார்கோல் ஸ்டீவன் மற்றும் எம்எஸ்சி ஏரிஸ் ஆகிய நான்கு கப்பல்களில் பணியாற்றிய 40 இந்திய மாலுமிகளை ஈரான் கடற்படை கைது செய்து சிறை வைத்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu