இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள், ஆதித்யா எல் 1 உள்ளிட்ட எதிர்கால விண்வெளி திட்ட தரவுகளை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் ஜப்பான் விண்வெளி மையமான ஜாக்சா ஆகியவை, விண்வெளி துறையில் சர்வதேச ஒத்துழைப்பை முன்னெடுத்துள்ளன. அதன்படி, விண்வெளி ஆராய்ச்சி துறையில் இணைந்து பணியாற்ற உள்ளன. குறிப்பாக, நிலவில் தண்ணீரை தேடும் திட்டத்தில் இணைந்து பணியாற்ற உள்ளன. இது குறித்த அறிவிப்பை இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் ஜப்பான் நாட்டின் தேசிய வானியல் ஆய்வக பொது மேலாளர் சாகு சுனேகா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அடுத்த சில ஆண்டுகளுக்கு, நிலவின் துருவப் பகுதி ஆய்வில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரோவின் சூரியன் குறித்த ஆய்வு திட்டமான ஆதித்யா எல் 1 திட்டத்தின் தரவுகளை பகிர்ந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.