செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புதினை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பங்கேற்ற பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். கூட்டத்தின் போது, அஜித் தோவல் பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷியாவின் அதிபர் புதினை அவர் சந்தித்தார். இருவரும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.