சுற்றுலா சந்தையில் சீனாவைத் பின்னுக்குத் தள்ளியது இந்தியா - வியட்நாம்

November 26, 2022

வியட்நாமைச் சேர்ந்த Vietravelன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டெல்லியில் உள்ள வியட்நாம் தூதரகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வியட்நாமுக்கு இந்தியா தான் சிறந்த சுற்றுலா சந்தை என்று கூறியுள்ளார். கொரானா பரவலால் சீனாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்தியா வியட்நாமின் சிறந்த சுற்றுலா சந்தையாக மாறி உள்ளதாக Vietravel இன் தலைமை நிர்வாக அதிகாரி டிரான் டோன் தி டுய் ௯றியுள்ளார். அதாவது இந்திய சுற்றுலா பயனிகள் தாய்லாந்திற்குச் செல்வதற்குப் பதிலாக வியட்நாமுக்கு வருகின்றனர்.  இந்திய சுற்றுலாப் […]

வியட்நாமைச் சேர்ந்த Vietravelன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டெல்லியில் உள்ள வியட்நாம் தூதரகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வியட்நாமுக்கு இந்தியா தான் சிறந்த சுற்றுலா சந்தை என்று கூறியுள்ளார்.

கொரானா பரவலால் சீனாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்தியா வியட்நாமின் சிறந்த சுற்றுலா சந்தையாக மாறி உள்ளதாக Vietravel இன் தலைமை நிர்வாக அதிகாரி டிரான் டோன் தி டுய் ௯றியுள்ளார். அதாவது இந்திய சுற்றுலா பயனிகள் தாய்லாந்திற்குச் செல்வதற்குப் பதிலாக வியட்நாமுக்கு வருகின்றனர்.  இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாம் செல்வதால் இரு நாடுகளுக்கு இடையே உள்ள கலாச்சார தொடர்புகள், வியட்நாமின் சாம் கலாச்சாரம் மற்றும் பல யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தளங்களைப் பற்றி அறியமுடியும் என்று ௯றினார்.

அதேசமயம் இரு நாடுகளுக்கும் இடையே பயண நேரம் வெறும் 5 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் Vietravel நிறுவனம் வியட்நாம்-இந்தியா சுற்றுலாவிற்கு இடையே இ௫நாட்டு ஒத்துழைப்புக்காக இந்திய நிறுவனத்தின் இரண்டு முக்கிய பங்குதாரர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகவும் அவர் ௯றினார். மறுபுறம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வியட்நாமில் இ௫க்க வி௫ம்பினால், வியட்நாம் சென்ற உடன் அங்குள்ள விமான நிலையத்தில் விசா பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்நுகழ்ச்சியில் ௯றப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu