இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ஐரிஸ் - கேரளாவில் அறிமுகம்

கேரளாவில் உள்ள கே டி சி டி மேல்நிலைப் பள்ளியில் மனித இயல்பு கொண்ட ரோபோ பெண் ஆசிரியை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேக்கர்லேப்ஸ் எஜு டெக் நிறுவனத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஐரிஸ் ரோபோ ஆசிரியையிடம் பல்வேறு பாடங்களில் இருந்து கேள்வி கேட்டால், சரளமாக சரியான பதிலை அளிக்கிறது. இதன் கால்களில் சக்கரங்கள் உள்ளதால், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து சென்று பேசுகிறது. […]

கேரளாவில் உள்ள கே டி சி டி மேல்நிலைப் பள்ளியில் மனித இயல்பு கொண்ட ரோபோ பெண் ஆசிரியை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேக்கர்லேப்ஸ் எஜு டெக் நிறுவனத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரிஸ் ரோபோ ஆசிரியையிடம் பல்வேறு பாடங்களில் இருந்து கேள்வி கேட்டால், சரளமாக சரியான பதிலை அளிக்கிறது. இதன் கால்களில் சக்கரங்கள் உள்ளதால், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து சென்று பேசுகிறது. இதன் வருகை மூலம், கற்றல் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் கல்வி கற்கவும், பலதரப்பட்ட கற்றல் முறைகளை பின்பற்றவும், மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், இந்த ரோபோ உதவி செய்யும், என பலரும் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu