ஈரான் சபஹார் துறைமுகத்தை செயல்படுத்த இந்தியா ஒப்பந்தம்

May 14, 2024

ஈரான் நாட்டில் உள்ள சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா ஈரான் இடையே கையொப்பமானது. ஈரான் நாட்டில் உள்ள சபஹார் துறைமுகத்தின் பணிகளை 10 ஆண்டுகள் மேற்கொள்ள இந்தியா ஈரான் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளிநாட்டில் உள்ள துறைமுகத்தை இந்தியா நிர்வகிப்பது இதுவே முதல்முறை. இந்த ஒப்பந்தமானது சர்வதேச வடக்கு தெற்கு வழித்தடத்தின் வழியாக மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே வணிகம் மேற்கொள்ள உதவும். இது தொடர்பாக மத்திய […]

ஈரான் நாட்டில் உள்ள சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா ஈரான் இடையே கையொப்பமானது.

ஈரான் நாட்டில் உள்ள சபஹார் துறைமுகத்தின் பணிகளை 10 ஆண்டுகள் மேற்கொள்ள இந்தியா ஈரான் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளிநாட்டில் உள்ள துறைமுகத்தை இந்தியா நிர்வகிப்பது இதுவே முதல்முறை. இந்த ஒப்பந்தமானது சர்வதேச வடக்கு தெற்கு வழித்தடத்தின் வழியாக மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே வணிகம் மேற்கொள்ள உதவும். இது தொடர்பாக மத்திய அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் துறைமுகத்தில் பணிகளை மேற்கொள்ள இந்தியாவின் போர்ட்ஸ் குளோபல் நிறுவனம் மற்றும் ஈரானிய துறைமுக மற்றும் கடல் சார்ந்த நிறுவனம் கையொப்பமிட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் பத்து ஆண்டுகளுக்கானது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனுவால் முன்னிலையில் இது கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே வணிகம் பெருகும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானிய அதிபர் முகமது கதாமி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கண்டபோது இந்த திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 2003-ல் இந்த துறைமுகம் மேம்பாட்டுக்காக 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக இந்திய அறிவித்திருந்தது. இந்தத் துறைமுகம் கடந்த 2019 முதல் 80 லட்சம் டன் அளவிலான சரக்குகளை கையாண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆயிரம் டன் கோதுமையை கடந்த ஆண்டு இந்தியா அனுப்பி இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu